முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.;

Update:2025-01-21 21:41 IST

புதுடெல்லி,

வயநாடு பேரிடரை சுட்டிக்காட்டி முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி மேத்யூ நெடும்பறா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் பாஸ்கரன் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், நீதிபதி சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்