ஆமதாபாத் விமான விபத்தில் மும்பையை சேர்ந்த விமானி, பணிப்பெண் உயிரிழந்த சோகம்

விமானி சுமீத் சபர்வால் 8 ஆயிரத்து 200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர் என தெரியவந்துள்ளது.;

Update:2025-06-13 04:15 IST

மும்பை,

ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த துயர விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி சுமீத் சபர்வால் மும்பையை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவர் மும்பை பவாய் ஹிரானந்தானி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர் விமானத்தை இயக்குவதில் நீண்ட அனுபவம் உடையவர் ஆவார். அவர் 8 ஆயிரத்து 200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர் என தெரியவந்துள்ளது. மேலும், மும்பையை அடுத்த பன்வெல்லை சேர்ந்த பணிப்பெண் மைதிலி பாட்டீல் (வயது23) உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. மைதிலி பாட்டீல் பன்வெல் தாலுகா நாவா கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

அதேபோன்று மும்பையை சேர்ந்த ஏர் இந்தியா ஊழியர் அபர்ணா மகாதிக்கும் (42) விமான விபத்தில் உயிரிழந்து உள்ளார்.இதேபோல மும்பையை அடுத்த தானே மாவட்டம் பத்லாப்பூரில் வசித்து வரும் ஏர் இந்தியா விமான ஊழியர் தீபக் பாதக் என்பவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் 11 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்