ராகுல் காந்தி இரண்டில் ஒன்றை செய்தாக வேண்டும்: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

ராகுல் சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர் கூறினார்.;

Update:2025-08-17 19:32 IST

புதுடெல்லி,

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதனை முன்வைத்து இன்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பிஹாரில் ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ நடத்துகிறார்.இந்த நிலையில், புதுடெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தேர்தல் ஆணையர் கூறுகையில், வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இதில் 3வது வாய்ப்பு என்பது கிடையாது, 7 நாட்களுக்குள் சத்திய பிரமாணம் வராவிட்டால், அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்பது அர்த்தம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அரசியல் காரணங்களுக்காக வாக்காளர்களை குறிவைக்க தேர்தல் ஆணையம் ஒரு ஏவுதளமாகப் பயன்படுத்தப்படும்போது, அனைத்து வாக்காளர்களுடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்