ஓணம் பண்டிகை; கேரளாவில் 14 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு
உப்பு, சீனி, மஞ்சள் பொடி, நெய், சிறு பயறு உள்பட 14 வகை மளிகை பொருட்கள் இந்த பரிசு தொகுப்பில் இடம் பெறும்;
திருவனந்தபுரம்,
கேரள உணவு வழங்கல் துறை மந்திரி அனில் ஆலப்புழையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரளாவில் செப்டம்பர் 5-ந் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 5 லட்சத்து 92 ஆயிரத்து 657 மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் 10 ஆயிரத்து 634 பேருக்கு பரிசு தொகுப்பு என மொத்தம் 6 லட்சத்து 3 ஆயிரத்து 201 பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
வருகிற 18-ந் தேதி முதல் ரேஷன் கடை மூலமாக இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும். ஒரு பரிசு தொகுப்பின் விலை ரூ.710 ஆகும். இவை இலவசமாக தனித்தனி துணிப்பைகளில் வழங்கப்படும். செப்டம்பர் 4-ந் தேதி வரை ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.இந்த பரிசு தொகுப்பில் உப்பு, சீனி, மஞ்சள் பொடி, நெய், சிறு பயறு உள்பட 14 வகை மளிகை பொருட்கள் இந்த பரிசு தொகுப்பில் இடம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.