ரெயில் நிலையத்தில் ஒரு வயது பெண் குழந்தை கடத்தல் - போலீஸ் தீவிர விசாரணை
பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்ற காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் ஒரு வயது பெண் குழந்தை மற்றும் அவரது தாய் உறங்கிக் கொண்டிருந்தனர். குழந்தையின் தாய் கழிவறைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது பெண் குழந்தை அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ரெயில் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர், பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ரெயிலில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் குழந்தையை கடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.