நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் சோனியா காந்தி தலைமையில் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ளது.;

Update:2025-07-13 20:42 IST

கோப்புப்படம் 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ந் தேதி வரை ஒரு மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை எளிதாக்குவது உள்பட பல முக்கிய மசோதாக்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தொடருக்கான காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) நடைபெற உள்ளது. சோனியா காந்தி தலைமையில் அவரது இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.

பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கோரி வருகிறது. இது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்