தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாடாளுமன்ற அலுவல் பட்டியல்

நேற்று முதல் மக்களவை அலுவல் பட்டியலும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியானது.;

Update:2025-07-22 00:46 IST

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் முன்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச முடிந்தது. பின்னர் பல மாநில எம்.பி.க்களின் முயற்சிகளுக்கு பிறகு பிராந்திய மொழிகளில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைப்போல மொழிபெயர்ப்பு வசதியும் முன்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டு முதல் இது அனைத்து மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் மக்களவை அலுவல் பட்டியலும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியானது. தற்போது ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி உள்பட 10 மொழிகளில் கிடைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்