பையில் வெடிகுண்டு இருப்பதாக அதிகாரியிடம் நகைச்சுவையாக பதிலளித்த பயணி கைது
கொச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு பற்றி பேசியதற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
கொச்சி,
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு விமானத்தில் ஏறும் நடைமுறைகளை முடித்த பிறகு, கோழிக்கோட்டை சேர்ந்த ரஷீத் என்பவரின் பையின் எடை குறித்து பாதுகாப்பு அதிகாரி விசாரித்தார். அதற்கு அவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
இதனால் அதிகாரிகள் அவரை உடனடியாக நெடும்பசேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை விடுவித்ததாக தெரிவித்தனர்.