வாக்கு திருட்டுக்காக பிரதமர் மோடி, அமித்ஷா பிடிபடுவார்கள்-ராகுல்காந்தி பேச்சு

வாக்கு திருட்டை முறியடிப்பது ஒவ்வொரு இளைஞரின் பொறுப்பு என்று ராகுல் காந்தி கூறினார்.;

Update:2025-11-10 06:26 IST

பாட்னா,

பீகார் இறுதிக்கட்ட தேர்தலையொட்டி, கிஷன்கஞ்ச், புர்னியா ஆகிய இடங்களில் நடந்த இந்தியா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டங்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

அவர் பேசியதாவது:-

அரியானாவில் பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்ததை நான் அம்பலப்படுத்தினேன். நான் பொய் சொல்வதாக இன்றுவரை பிரதமரோ, தலைமை தேர்தல் கமிஷனரோ சொல்லவில்லை. ஏனென்றால், மக்கள் முன்பு உண்மை வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அவர்கள் விரும்பும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.. ஆனால், வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் அவர்கள் பிடிபடுவார்கள். பீகாரில் மக்கள் ஒன்று திரண்டு வாக்கு திருட்டை தடுத்து நிறுத்தினால், அங்கு இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளில் விழிப்புடன் இருங்கள்.

வாக்கு திருட்டை முறியடிப்பது ஒவ்வொரு இளைஞரின் பொறுப்பு. பீகார் இளைஞர்கள் பெங்களூரு போன்ற நகரங்களில், சாலை அமைப்பது, பள்ளி, கல்லூரிகள் கட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏன் அவர்களுக்கு பீகாரிலேயே வேலை கொடுக்க முடியவில்லை? இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்