அங்கோலா பாதுகாப்புப்படைக்கானகடன் அளவு ரூ.1,650 கோடியாக அதிகரிப்பு ; பிரதமர் மோடி அறிவிப்பு

அங்கோலா ஜனாதிபதி இந்தியாவிற்கு வந்துள்ளார்.;

Update:2025-05-03 15:50 IST

டெல்லி,

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு அங்கோலா. அந்நாட்டின் ஜனாதிபதியாக ஜவா மனுவேல் கோன்கவாஸ் லவ்ரன்கோ செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக லவ்ரன்கோ இந்தியா வந்துள்ளார்.

அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவு, பாதுகாப்பு, வர்த்தகம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பிற்குபின், அங்கோலா பாதுகாப்புப்படைக்கன கடன் அளவு வரையறை  1,650 கோடி ரூபாய் (200 மில்லியன் டாலர்கள்) ஆக அதிகரிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள அங்கோலா பாதுகாப்புப்படைக்கான கடன் அளவு ரூ. 1,650 கோடி வரை அதிகரிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்