பாஜகவின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
புதிய கட்டிட திறப்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் பாஜகவின் புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய மந்திரியுமான ஜெ.பி. நட்டா, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, டெ ல்லி பாஜக தலைவர்கள் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட், பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, கமல்ஜீத் செஹ்ராவத், யோகேந்தர் சந்தோலியா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய அலுவலகம், தேசிய தலைநகரில் நிறுவன நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும், கட்சித் தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு மையமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.