சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.;

Update:2025-10-31 09:01 IST

குஜராத்,

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக இன்று கொண்டாடப்பட்டுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர் தூவப்பட்டது. மேலும் பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்