டெல்லியில் அமெரிக்க சுற்றுலா பயணிகளிடம் கைவரிசை - கொள்ளையர்களை சுட்டுப் பிடித்த போலீஸ்

போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.;

Update:2025-06-30 09:18 IST

புதுடெல்லி,

அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் இந்தியாவை சுற்றி பார்க்க வந்தனர். அவர்கள் டெல்லியில் உள்ள பூங்காவில் நடந்து சென்றனர். அப்போது திடீரென வழிமறித்த கொள்ளையர்கள் 2 பேர் சுற்றுலாவாசிகளை தாக்கி, அவர்களின் உடைமைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் மறைந்து இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்