பீகாரில் ரோடு ஷோவின் போது பிரசாந்த் கிஷோருக்கு காயம்

கூட்ட நெரிசலில் விலா பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.;

Update:2025-07-19 13:03 IST

பாட்னா,

பீகாரில் ரோடு ஷோவின்போது  ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் காயம் அடைந்தார். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆரா பகுதியில் தேர்தல் வியூக நிபுணரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ரோடு ஷோவில் ஈடுபட்டார்.

அப்போது கூட்ட நெரிசலில் விலா பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பிரசாந்த் கிஷோரை தொண்டர்கள் மேடைக்கு அழைத்துச் சென்றனர். மேடையில் மயக்கம் அடையும் நிலைக்கு அவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்