மராட்டியம்: போலீசார் அதிரடி சோதனை - பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்கள் மீட்பு
மீட்கப்பட்ட 2 பெண்களும் போதிய உதவி வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் டலிகான் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு டகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்களை போலீசார் மீட்டனர். இதையடுத்து, பாலியல் தொழில் நடத்தி தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேவேளை, மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் போதிய உதவி வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.