பஞ்சாப்: 8 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது;
சண்டிகர்,
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் பெரோஷ்பூர் மாவட்டம் ஹெட் ரஜோ கிராமத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 8 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போதைப்பொருளை கடத்தி வந்த நபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.