சிறையில் அடைக்கப்பட்ட ரேவண்ணாவுக்கு மாதம் தோறும் 524 ரூபாய் சம்பளம்

மற்ற கைதிகள் போல ரேவண்ணாவும் சிறையில் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update:2025-08-04 18:39 IST

கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் பிரதமர் தேவேகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா (47 வயது) வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 4 பாலியல் வழக்குகள் அவர் மீது பாய்ந்தது. இதையடுத்து பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு 14 மாதங்களில் ரேவண்ணா மீதான வழக்கை விசாரித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு அளித்தது. ரேவண்ணா சாகும்வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரேவண்ணா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முதல் அவருக்கு சிறை கைதிகளுக்கான வெள்ளை உடை வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு 15528 என்ற சிறை கைதி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கைதிகள் போல ரேவண்ணாவும் சிறையில் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிறையில் பேக்கரி, காய்கறி தோட்டம் பராமரிக்கும் பணி அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் செய்து முடித்த பிறகு தச்சு வேலைகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைக்குள் தினமும் 8 மணி நேரம் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் என்று ரேவண்ணாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்காக அவருக்கு மாத சம்பளமாக ரூ.524 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூடுதலாக பணிபுரிந்தால் அதற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்