"சிவாஜியின் வீரம் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்" - பவன் கல்யாண்
இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மற்ற அரசர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என பவன் கல்யாண் கூறினார்.;
விஜயவாடா,
அக்பர் மற்றும் பாபருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சத்ரபதி சிவாஜிக்கு வழங்கப்படுவதில்லை என ஆந்திர துணை முதல்- மந்திரி பவன் கல்யாண் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அக்பர் குறித்து உயர்வாக பேசுகிறோம். பாபர் போல் அதிரடியான ஆக்கிரமிப்பாளரை மகிமைப்படுத்துகிறோம்.
ஆனால் விஜயநகரப் பேரரசு பற்றி ஏன் எதுவும் சொல்லப்படவில்லை? சத்ரபதி சிவாஜி, தமிழ்நாட்டில் கோவில்களை காப்பாற்றிய வரலாறு ஏன் பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை?" எனக் கேள்வியெழுப்பினார்.
இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மற்ற அரசர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், இந்தியர் அனைவருக்கும் இந்த உண்மைகளை அறிய வேண்டிய அவசியமுள்ளதாக கூறியுள்ளார்.