குஜராத்தில் விளையாட்டு திடலில் திடீர் தீ விபத்து; சிறுவர் சிறுமிகள் உள்பட 20 பேர் பலி

குஜராத் முதல்-மந்திரி பூபேந்திரா பட்டேல், உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2024-05-25 16:04 GMT

ராஜ்கோட்,

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சிறுவர்கள் விரும்பி விளையாடுவதற்கு ஏற்ப விளையாட்டு திடல் ஒன்று செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு சிறுவர், சிறுமிகள் இந்த உள்ளரங்கத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடலில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை திடீரென இந்த திடலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், சிறுவர்கள் பலர் சிக்கி கொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர்.

 

இதுவரை சிறுவர் சிறுமிகள் உள்பட 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த விளையாட்டு திடலின் உரிமையாளராக யுவராஜ் சிங் சொலாங்கி என்பவர் இருந்து வருகிறார். தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது என காவல் ஆணையாளர் ராஜு பார்கவா கூறியுள்ளார்.

உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திரா பட்டேல் உத்தரவிட்டு உள்ளார். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்