கடிக்க பாய்ந்ததால் தெரு நாயை அடித்து கொன்ற டீ கடைக்காரர்

டீக்கடைக்காரர் மோகனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-11-15 02:43 IST

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீ கடை நடத்தி வருபவர் மோகன் (வயது 56). இவரது கடைக்கு டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களை அப்பகுதியை சேர்ந்த தெருநாய் கடிக்க பாய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மோகன் தெருநாயை கட்டையால் அடித்துக்கொன்றுள்ளார்.

பின்னர், நாயின் உடலை அங்குள்ள குப்பை தொட்டியில் தூக்கி போட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் டீக்கடைக்காரர் மோகனை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்