ஆசிரியை மீது ஆசிட் வீச்சு - அதிர்ச்சி சம்பவம்

போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.;

Update:2025-09-27 07:40 IST

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தின் நகாசா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 22 வயது ஆசிரியை ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற நிசு திவாரி (30) என்பவர் திடீரென ஆசிரியை முகத்தில் ஆசிட் வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினார்.

இதனையடுத்து வலியில் துடித்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் குற்றவாளியை தேடினர். அப்போது கல்யாண்பூர் கிராமத்திற்கு அருகே போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற நிசு திவாரியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்