தொழில்நுட்ப கோளாறு - திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்

சோதனைகளுக்குப் பிறகு ஹெலிகாப்டர் விமானப்படை தளத்திற்கு திரும்பியுள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.;

Update:2025-06-13 16:35 IST

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹாலட் கிராமத்தில் உள்ள திறந்தவெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பிறகு ஹெலிகாப்டர் விமானப்படை தளத்திற்கு திரும்பியுள்ளதாகவும் இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

முன்னதாக கடந்த 6-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மற்றொரு அப்பாச்சி ஹெலிகாப்ட்டர், இதே போல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்