பெண்ணை 9 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.;

Update:2025-08-17 11:37 IST

கோப்புப்படம் 

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவானந்த். இவரது மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ரேஷ்மாவுக்கும்,  ஆனந்த்ராஜுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதனை அறிந்த சிவானந்த், தனது மனைவி ரேஷ்மாவை கண்டித்துள்ளார். இதையடுத்து ஆனந்த்ராஜுடன் இருந்த கள்ளத்தொடர்பை ரேஷ்மா நிறுத்தி இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த்ராஜ், நேற்று முன்தினம் சிவானந்த் வீடு புகுந்து, அவரது குழந்தைகள் முன்பாக ரேஷ்மாவை ஆனந்த்ராஜ் குத்திக் கொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொடூர செயலில் ஈடுபட்ட ஆனந்த்ராஜை கைதுசெய்தனர். ரேஷ்மாவின் வயிறு, மார்பில் 9 முறை கத்தியால் குத்தி ஆனந்த்ராஜ் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்