கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான தமிழக அரசின் மனு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
சி.பி.ஐ. விசாரணைக்கான உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.;
புதுடெல்லி,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த அக்டோபர் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஐகோர்ட்டு அமைத்த எஸ்.ஐ.டி.யும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.