சீனாவில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பேட்மிண்டன் ஆசியா கலப்பு அணி சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார். தொடை தசைநார் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளார்.
டெல்லி துணை நிலை கவர்னர் விகே சக்சேனாவுடன் முதல் மந்திரி அதிஷி சந்திப்பு: தேர்தலில் பாஜக வென்றுள்ள நிலையில், கவர்னரை சந்தித்து அதிஷி ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டம், ஜி மாங்லியன் கிராமத்தின் மலைப்பகுதியில் ஒபியம் போதைப்பொருள் தயாரிப்பதற்காக சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த கசகசா செடிகளை போலீசார் அழித்தனர். இதற்கு ஆதாரமாக, 10 கசகசா காய்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறி உள்ளனர்.
மகா கும்பமேளாவில் பங்கேற்க ஏராளமானோர் வாகனங்களில் வருவதால் போக்குவரத்து தடை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கும்பமேளா முடியும் வரை உத்தர பிரதேசத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் நார்கேல்தங்கா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 30 குடிசைகள் எரிந்து நாசமாகின. தீயில் சிக்கி 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் தொழிலாளர்கள் மீது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்ற நிலையில் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பர்வேஷ் வெர்மா, பன்சூரி ஸ்வராஜ், வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. தேசிய செயலர் துஷ்யந்த் கவுதம், மனோஜ் திவாரி எம்.பி. உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.