அரியானா: துப்பாக்கியால் சுட்டு ஏடிஜிபி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update:2025-10-07 17:10 IST

சண்டிகர்,

அரியானா மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக செயல்பட்டு வந்தவர் புரன்குமார் (ஐபிஎஸ்). இவரது மனைவி அம்னெட். இவர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதல்-மந்திரி தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார். புரன்குமார் தனது மனைவியுடன் சண்டிகரில் உள்ள செக்டர் 11 பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், புரன்குமார் நேற்று இரவு தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், புரன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

Tags:    

மேலும் செய்திகள்