பீரோ கதவில் தொங்கி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்
கதவில் தொங்கி விளையாடியபோது எதிர்பாராத விதமாக சிறுமி மீது பீரோ விழுந்துள்ளது.;
சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராம் நகரில் உள்ள பஹார் காலனியை சேர்ந்த 6 வயது சிறுமி தீபான்ஷி. இவர் கடந்த திங்கள்கிழமை மாலை தனது வீட்டில் உள்ள பீரோவின் கதவில் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பீரோ சிறுமி தீபான்ஷி மீது விழுந்துள்ளது.
இதில் அந்த சிறுமிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து தீபான்ஷியின் பெற்றோர், உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீரோ விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.