விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள்: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

விமானி அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று ரகளையில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2025-07-15 10:30 IST

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறியிருந்த நிலையில், விமானம் ஒடுதளம் பகுதிக்கு புறப்பட இருந்தது. அப்போது விமானத்தில் இருந்த இரண்டுபயணிகள் காக்பிட் அறை என்று சொல்லப்படக் கூடிய விமானி அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று ரகளையில் ஈடுபட்டனர்.

அந்த பயணிகளை இருக்கையில் அமருமாறு விமான சிப்பந்திகள் கேட்டுக்கொண்ட போது, அதை காதில் வாங்காமல் தொடர்ந்து இடையூறு அளிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினருக்கு விமான சிப்பந்திகள் தகவல் கொடுத்தனர்.

உடனே விரைந்து வந்த சிஆர்பிஎப் வீரர்கள் பயணிகள் இருவரையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மேற்கூறிய காரணத்தால் 12.30 மணிக்கு புறப்பட இருந்த விமானம், இரவு 7.21 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்