உ.பி.: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஏர் இந்தியா விமானத்தின் அனைத்து பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகளும் நிறைவடைந்ததும் விமானம் இயக்கப்படும் என அறிக்கை தெரிவிக்கின்றது.;
வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் இருந்து இன்று புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனை தொடர்து, அரசு நியமித்த வெடிகுண்டு மிரட்டல் ஆய்வு குழுவுக்கு அந்த விமான நிறுவனம் தகவல் அளித்தது.
இதுபற்றி அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, எங்களுடைய விமானம் ஒன்று வாரணாசிக்கு இன்று புறப்பட இருந்தது. அதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடப்பட்டது. உடனடியாக எச்சரிக்கை விடப்பட்டு அனைத்து தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன என கூறினார்.
இதன்பின் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகளும் நிறைவடைந்ததும் விமானம் இயக்கப்படும் என அது தொடர்பான அறிக்கை தெரிவிக்கின்றது.