உ.பி.: லிவ்-இன் முறையில் வாழ்ந்த தென்கொரிய நபர் படுகொலை; மணிப்பூர் இளம்பெண் கைது
தென்கொரியாவை சேர்ந்த டக் ஹீ என்பவரை அந்த பெண் கத்தியால் குத்தி தாக்கியிருக்கிறார்.;
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரில் தென்கொரியாவை சேர்ந்த டக் ஹீ யூ என்பவர் மணிப்பூரின் தங்கல் நகரை சேர்ந்த லுஞ்ஜியானா பமை என்பவருடன் லிவ்-இன் உறவு முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஹீயை அந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.
இதுபற்றி கிரேட்டர் நொய்டா போலீசார் கூறும்போது, ஹீயை அந்த பெண் கத்தியால் குத்தி தாக்கியிருக்கிறார். இதில் படுகாயமடைந்த அந்நபரை கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவரே சிகிச்சைக்கு இன்று கொண்டு சென்றுள்ளார்.
எனினும், சிகிச்சை பலனின்றி ஹீ யூ உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தின்போது, அந்த பெண் குடிபோதையில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நாலெட்ஜ் பூங்கா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான சூழல் மற்றும் காரணம் ஆகியவை பற்றி விசாரணை நடந்து வருகிறது.