பிரான்ஸ், லக்சம்பர்க்கிற்கு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 6 நாள் பயணம்

லக்சம்பர்க் நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார துறை மந்திரியான சேவியர் பெத்தல்லை மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேச இருக்கிறார்.;

Update:2026-01-04 22:12 IST

புதுடெல்லி,

பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் நாடுகளுக்கு 6 நாள் பயணம் மேற்கொள்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தில், இரு நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலான உயர்மட்ட கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார்.

இதன்படி, பிரான்ஸ் செல்லும் அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜீன்-நோயல் பேரட்டை சந்தித்து பேசுவதுடன், பிற தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். பாரீசில் நடைபெறும் பிரெஞ்சு தூதரக மாநாட்டிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

பிரான்ஸ் சுற்றுப்பயணம் முடிந்ததும் லக்சம்பர்க் நாட்டுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார துறை மந்திரியான சேவியர் பெத்தல் மற்றும் பிற தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார்.

இதில், பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் அவருடைய கூட்டங்கள் முக்கியத்துவம் பெறும்.

Tags:    

மேலும் செய்திகள்