மேற்கு வங்க தேர்தலுக்காகவே வந்தே மாதரம் பிரச்சினை - மக்களவையில் பிரியங்கா பேச்சு

இந்தியாவின் வளர்ச்சிக்கு நேரு அமைத்துத்தந்த அடித்தளம்தான் காரணம் என பிரியங்கா எம்.பி. கூறியுள்ளார்.;

Update:2025-12-08 16:37 IST

புதுடெல்லி,

மக்களவையில் நடைபெற்று வரும் வந்தே மாதரம் 150 ஆண்டு நிறைவு சிறப்பு விவாதத்தில் பிரியங்கா காந்தி எம்.பி. பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தின் அடையாளமாகவே வந்தே மாதரம் திகழ்கிறது. காங்கிரஸ் மாநாட்டில் தான் முதல் முறையாக வந்தே மாதரம் பாடப்பட்டது.ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தியது வந்தே மாதரம்.

பிரதமர் மோடி நன்றாக பேசுகிறார். ஆனால் அதில் உண்மையில்லை. முன்னுக்கு பின் முரண் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு நேரு அமைத்து தந்த அடித்தளம்தான் காரணம்.நேரு குறித்து குறை கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி

நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே பாஜக அரசு வந்தே மாதரம் குறித்து விவாதம் நடத்துகிறது. மேற்கு வங்க தேர்தல் வருவதால் தான் வந்தே மாதரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.கடந்த காலம் பற்றி பேசி பாஜக அரசியல் செய்கிறது. நாட்டின் வளர்ச்சி குறித்த எதிர்கால இலக்குகள் பாஜகவிடம் இல்லை. உங்களுக்கு அரசியல்தான் முக்கியம். எங்களுக்கு நாட்டு மக்களே முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்