பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதிய லாரி - பெண் பலி
விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்;
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் அலண்டி பகுதியில் இந்து மதக்கடவுள் விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில், ராய்கட் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 15க்கும் மேற்பட்டோர் பாத யாத்திரையாக விஷ்ணு கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புனே மாவட்டம் கம்ஷட் கிராமம் அருகே பழைய மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை பக்தர்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த லாரி, பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பிரியங்கா என்ற பெண் உயிரிழந்தார். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.