சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.;

Update:2025-10-29 05:44 IST

சிவகங்கை,

மதுரை கே.புதூர் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் என்ற குமார் (வயது 41). கட்டிட தொழிலாளி. இவர் 2018-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரனை செய்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்