விளையாட்டு நகரம் அமைக்க செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் நிலம் தயார் - தமிழக அரசு தகவல்

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-03-28 09:35 IST

கோப்புப்படம் 

தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு நேற்று முன்வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 4 அடுக்கு கட்டிடமாக உயர் செயல்திறன் பயிற்சி மையம், 250 படுக்கை வசதி, தங்கும் விடுதி, உடற்பயிற்சி கூடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும். நகர்ப்புறங்களில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு 12,838 நகர்ப்புற வார்டுகளில் 19,429 தொகுப்புகள் வினியோகம் செய்யப்படும்.

கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 688 மாணவர்கள், 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இலங்கை தமிழர் குடும்பங்களையும் சார்ந்த 14,246 பெண்கள் உள்பட 1.15 கோடி பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

விளையாட்டு நகரத்தை அமைக்க சென்னை செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் அடையாளம் காணப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது, முக்கிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், மாநிலத்தில் நடைபெற வழிவகுக்கும். பிரபலமான பாரம்பரிய விளையாட்டுகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதுடன், இளைஞர்களை விளையாட்டுகளை நோக்கி ஈர்க்க வழிவகுக்கும். இதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை முடிவடையும் தருவாயில் உள்ளது.

கோவை சிங்காநல்லூரில் 28.36 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு உரிய தரமான வேலைவாய்ப்பு திட்டம் ஒன்று ரூ.50 லட்சம் செலவில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்