17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை: தொழிலாளி மீது போக்சோ வழக்கு

சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-05-08 08:23 IST

மதுரை,

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 25). கொத்தனார். இவர் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகினார். மேலும் அவரை திருமணம் செய்து மதுரையில் வாடகை வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்.

சிறுமிக்கு பிரசவ வலி ஏற்படவே அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அறிந்த மதுரை மேற்கு யூனியன் ஊர்நல அலுவலர் செல்வி, சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பிரசன்னா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்