வழுக்கை கழுகு எனப்படும் வெண்தலைக் கழுகு அமெரிக்காவின் தேசிய பறவையானது. அமெரிக்க வலிமையின் அடையாளமாக கருதப்படும் இந்த பறவையை, தேசிய பறவையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட நிலையில் சட்டமானது.
அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரனை மாணவரணி தலைவராக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையை கண்டித்து அண்ணா பல்கலை.க்கு வெளியே மாணவர்கள் அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அஜர்பைஜானில் இருந்து 110 பேருடன் ரஷியா சென்ற விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கியது.10க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசர்பைஜானின் பாகுவில் இருந்து ட்ரோஸ்னி சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு அக்தாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க கோரிவிட்டு வானில் வட்டமடித்து வந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
போலி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அதிஷியை கைது செய்யலாம்- கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி
பா.ஜ.க.வின் கட்டளையின்பேரில், டெல்லி முதல்-மந்திரி அதிஷியை போலி வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்யலாம் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியை தேர்தல் பிரசாரத்தில் இருந்து திசை திருப்ப பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. நேற்று 1 டாலரின் மதிப்பு ரூ.85.18 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் சரிந்து ரூ.85.81 ஆக உள்ளது.
கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அசர்பைஜானின் பாகுவில் இருந்து ட்ரோஸ்னி சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.