திருநெல்வேலியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தாழையூத்து பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.;

Update:2025-11-16 16:03 IST

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த தளவாய்(எ) காவு மகன் பெருமாள் (வயது 25), கணேசன் மகன் அஜித்குமார்(30), பெருமாள் மகன் கிருஷ்ணபெருமாள்(19) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கொலை மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமாமர் உத்தரவின்பேரில் மேற்சொன்ன 3 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்