சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை - சென்னை ‘போக்சோ' கோர்ட்டு தீர்ப்பு

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;

Update:2025-10-26 07:10 IST

கோப்புப்படம் 

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 2021-ம் ஆண்டு வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, சிறுமியின் வீட்டுக்கு எதிரே வசித்து வந்த வெங்கடேசன் (47 வயது) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவர், சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எஸ்.பத்மா முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்