திருநெல்வேலி: உணவு தயாரிக்கும் கூடத்தில் கொதிக்கும் எண்ணெய் கொட்டி 6 தொழிலாளர்கள் படுகாயம்

ரெயில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தில் கொதிக்கும் எண்ணெய் கொட்டி 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.;

Update:2025-08-22 21:39 IST

கோப்புப்படம் 

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்கு வதற்காக ஒப்பந்தம் பெற்ற ஒரு நிறுவனம் திருநெல்வேலி சந்திப்பு பாலபாக்யா நகரில் உணவு தயாரிக்கும் கூடம் வைத்துள்ளது.

இங்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிலர் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அதிகாலை வழக்கம்போல் காலை உணவுக்கு தேவையான வடை உள்ளிட்ட உணவு பொருட்களை சமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எண்ணெய் சட்டியின் மீது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக எண்ணெய் சட்டி கவிழ்ந்து அருகில் இருந்த தொழிலாளர்கள் மீது எண்ணெய் கொட்டியது.

இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்