சென்னையில் இன்று 743 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது

இதுநாள்வரை 99,503 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 55,788 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-12 21:38 IST

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த 08.10.2025 அன்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுநாள்வரை 99,503 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 55,788 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகளுக்கான உரிமை வழங்குவதற்கு 14.12.2025 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் கோரிக்களை ஏற்றும் இப்பணியை மேலும் சிறப்புடன் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் இன்று (12.12.2025) மற்றும் 13.12.2025, 14.12.2025 ஆகிய மூன்று நாட்களுக்கு செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் சிறப்பு முகாம்கள் 8 இடங்களில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்திட திட்டமிடப்பட்டு இன்று நடைபெற்றது.

அவ்வாறாக, இன்று 8 இடங்களில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 743 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாட்களும் இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

எனவே, செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இதனைப் பயன்படுத்தி 14.12.2025க்குள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை கட்டாயம் பெற்றுக் கொண்டு அபராதம் செலுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்