8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று ரத்து

விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.;

Update:2025-06-20 10:58 IST

சென்னை,

ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு வருவதால், அந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 8 ஏர் இந்தியா விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய் - சென்னை, டெல்லி - மெல்போர்ன், மெல்போர்ன் - டெல்லி, துபாய் - ஐதராபாத், புனே - டெல்லி, அகமதாபாத் - டெல்லி, சென்னை - மும்பை, ஐதராபாத் - மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத், மும்பை, துபாய் செல்லவிருந்த விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ரத்துக்கு முறையாக காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்