தாய்லாந்து அழகிப்போட்டியில் கலாசார தூதர் பட்டம் வென்ற முதுகுளத்தூர் பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு

தாய்லாந்து அழகிப்போட்டியில் கலாசார தூதர் பட்டம் வென்ற முதுகுளத்தூர் பெண்ணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update:2025-11-17 08:51 IST

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கஜேந்திர பிரபு. இவருடைய மனைவி அல்லிராணி. இவர்களது மகள் ஜோதி மலர் (வயது 28). இவர் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு புனேயில் நடைபெற்ற தேசிய அளவிலான மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பட்டம் வென்றார். பின்பு தாய்லாந்தில் கடந்த 8-ந் தேதி நடைபெற்ற மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகிப்போட்டியில் 30 நாடுகள் கலந்து கொண்டன.

இதில் பங்கேற்ற ஜோதி மலர் வெற்றி பெற்றார். அவருக்கு கலாசார தூதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் தனது சொந்த ஊரான முதுகுளத்திற்கு நேற்று வந்தார். ஜோதி மலருக்கு பஸ் நிலையத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ஜோதி மலர் கூறுகையில், உலகெங்கிலும் உள்ள போட்டியாளர்களிடையே நம்பிக்கை, நேர்த்தி மற்றும் இந்திய பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன் தனித்து நின்றேன். முதல்முறையாக பெங்களூருவில் மாடலிங் சுற்றுகளில் தொடங்கியது. அங்கு நான் முதலில் மிஸ் பேஷன் என்ற பாராட்டை பெற்றேன். சர்வதேச மேடையில் இந்திய பிரதிநிதியாக கலாசார தூதர் பட்டத்தை வென்றுள்ளேன். தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்