சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறுசேரிக்கு ஏ.சி. மின்சார பஸ்

கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.;

Update:2025-08-21 11:35 IST

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் பயணிகளின் வசதிக்காக விமான நிலையம்-கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் விமான நிலையம்-அக்கரை ஆகிய 2 வழித்தடங்களில் மாநகர பஸ்களை இயக்கி வருகிறது. இந்த பஸ்கள் விமான பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

எனவே விமான நிலையத்தில் இருந்து மேலும் பல்வேறு வழித்தடங்களுக்கு கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி தொழிற்பேட்டைக்கு புதிதாக ஏ.சி. மின்சார பஸ்களை மாநகர போக்குவரத்து கழகம் இயக்க தொடங்கியுள்ளது. இந்த பஸ்கள், விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் மேம்பாலம் வழியாக கீழ்கட்டளை சந்திப்பு ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, சோழிங்கநல்லூர், துைரப்பாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சிறுசேரி செல்கிறது.

முழுமையான ஏ.சி. வசதி கொண்ட இந்த மின்சார பஸ்கள் விமான பயணிகளின் பயணத்தை மேலும் சொகுசுவாக்குவதோடு சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்