வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் - பார் கவுன்சில் அறிவிப்பு
வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு ‘999' என்ற புதிய விபத்து காப்பீட்டுத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறும்போது, “பார் கவுன்சிலும், நேஷனல் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து இந்த புதிய விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளோம். வக்கீல்கள் ஆண்டுக்கு ரூ.999 செலுத்தினால் மட்டும் போதும்.
விபத்து மருத்துவ செலவுக்கு ரூ.3 லட்சமும், விபத்தில் பலியானால் ரூ.25 லட்சம், விபத்தில் உடல் உறுப்பு இழந்தால் ரூ.25 லட்சம் என்று பல்வேறு இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த காப்பீட்டில் சேர பார் கவுன்சில் இணையதளம் மூலம் வக்கீல்கள் விண்ணப்பிக்கலாம்'' என்று கூறினார்.