ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீண்டும் சிறையில் அடைப்பு
கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமின் மனுவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு,
கன்னட நடிகர் தர்ஷன், சித்ரதுர்காவைச் சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில், கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு ஜாமின் வழங்கியது. இதையடுத்து, தர்ஷன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதையடுத்து, தர்ஷன் உள்பட 7 பேரின் ஜாமினை எதிர்த்து கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பு வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடிகர் தர்ஷனின் ஜாமின் மனுவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று மாலை தர்ஷனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.