நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம்; போனி கபூர் தொடர்ந்த வழக்கில் தாசில்தார் பதிலளிக்க கோர்ட்டு உத்தரவு

போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-08-25 20:20 IST

சென்னை,

மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக, அவரது கணவர் போனி கபூர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்நிலையில், மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என தாம்பரம் தாசில்தாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்