சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வினியோகம் - தமிழக அரசு உத்தரவு

ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.;

Update:2025-04-29 00:41 IST

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"சித்திரை மாதத்தின் விஷேச தினமான நாளை (புதன்கிழமை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் (டோக்கன்) ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தது.

இதையேற்று, நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும்.

அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்