மாவட்ட வாரியாக அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி, களப்பணி ஆற்றுமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.;
கோப்புப்படம்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்திடும் வகையில், சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், பூத் (பாகம்) கிளைக் கழகங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள பூத் (பாகம்) கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தக்க பயிற்சி அளித்து, தேர்தல் பணிகளில் அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்வதற்கும்; ஒவ்வொரு பூத்திற்கும் உட்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களிடையே வீடுதோறும் சென்று, தி.மு.க.வின் பொய் வாக்குறுதிகள் மற்றும் தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்துக் கூறுவதற்கும்; மக்கள் நலன் கருதி அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட முத்தான திட்டங்களை விளக்கமாக எடுத்துக் கூறுவதற்குமான பணிகளை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்காக, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
சென்னை மண்டலம்
வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்- சார்லஸ் குமார் மு. கௌதம், சுசிபால்.
வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் - ராஜசேகர் , கங்கை அமரன், காளிதாஸ்.
வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் - சபரீஷ் மணிகண்டன், காசிராஜபாண்டியன், ராஜ்குமார்.
வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் - இமயம் மனோஜ், ஜெயகிருஷ்ணன், நந்தகுமார்.
தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் - அபிஷேக் ஜேக்கப், விமல்ராஜ், சதீஷ்குமார்.
தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் - உதயகுமார், கோவிந்தராஜூலு (எ) கமல், பிரான்சிஸ்.
தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் - சரவணன் கஜேந்திரன், மஹேந்திரன், சங்கர்.
தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் - ஆலந்தூர் பாலாஜி , மோகன்ராஜ், ஜெகநாதன். சென்னை புறநகர் மாவட்டம் - கார்த்திக், மாதவரம் சங்கர், நித்யானந்தம்
காஞ்சிபுரம் மண்டலம்
காஞ்சிபுரம் மாவட்டம் - வினோத், கோபிநாத், கமலேஷ்பாபு.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் - பாலமுருகன், பவழன், கல்பனாதேவி.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் - யுவகுமார், பத்மநாபன் (எ) பாபு, பூவரசன்.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் - விமல், விக்னேஷ், வெற்றிநகர் சுந்தர்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம் - ஜீவா, வைகுண்டராஜன், கேசவ் சௌந்தர்ராஜன்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் - தனஸ்ரீ, சரவணராஜ், சேப்பாக்கம் ஸ்ரீ (எ) ஸ்ரீகாந்த்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - பூவன் வடிவேல், தனசேகரன், நவாஸ் அக்பர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - யோக விக்னேஸ்வரன், ஷாம்குமார், அருண்.
விழுப்புரம் மண்டலம்
விழுப்புரம் மாவட்டம் - முத்தமிழ்செல்வன், அரிகரன், ஜெயராஜ், ராதாகிருஷ்ணன், கோபால் (எ) நந்தகோபால், ஜனார்த்தனன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் - பிரபு, தினேஷ், ஆதிநாராயணன், பிரபு, ஜீவா, பிரதீப்.
கடலூர் கிழக்கு மாவட்டம் - கிருபானந்தன், மணிகண்டன், சம்பத் பாண்டியன்.
கடலூர் வடக்கு மாவட்டம் - கோகுல்ராஜ், எழில்ராஜ், துரைராஜ்.
கடலூர் தெற்கு மாவட்டம் - மாலதி, மணிகண்டன்,ஜெயசூர்யா.
கடலூர் மேற்கு மாவட்டம் - காமேஷ், பிரபாகரன், பாலாஜி.
சேலம் மண்டலம்
சேலம் மாநகர் மாவட்டம் - பிரசன்னகுமார், கங்கராஜூ, கார்த்திக்.
சேலம் புறநகர் மாவட்டம் - சாந்தகுமார், கிரிநாத், சக்திவேல், பிரசாத், கோவிந்தசாமி, சுதாகரன், ராஜசேகரன், வேலன், நித்தியானந்தன்.
தருமபுரி மாவட்டம் - பானுபிரதாப், சுகுமார், ராஜ்குமார், ஜெயகாந்தன், மேகலா, பிரசாந்த்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்- நிர்மல் ஆனந்த், தமிழ்வாணன், ரமேஷ்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் - சதீஷ், பிரசன்னன், யாதவபிரபு (எ) பிரபாஹரன்.
ஈரோடு மண்டலம்
ஈரோடு மாநகர் மாவட்டம் - நல்லகுமார், முரளி பாலுச்சாமி, கண்ணன்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் - செந்தில்குமார் (எ) பசுபதி செந்தில், சுரேஷ், தனபால் ஆறுமுகம்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் - திருநாவுக்கரசு, சிவராஜ், கார்த்திக்.
நாமக்கல் மாவட்டம் - டாக்டர் மகேஷ் ராஜா, மோகன்குமார், கௌதம், துரை சேனாபதி (எ) துரைசாமி, ஜனகரத்தினம், கபில் நல்லகுமார்.
கரூர் மாவட்டம் - பொன்.அரவிந்தன், விவேகானந்தன், கோபாலகிருஷ்ணன்.
கோவை மண்டலம்
கோவை மாநகர் மாவட்டம் - ராக்கேஷ் செல்வன், கருப்புசாமி (எ) கதீஷ் குமரவேல், கார்த்திக் சுப்புராஜ்.
கோவை புறநகர் வடக்கு மாவட்டம் - சஞ்சய், ஹரி பிரகாஷ், ஹரிஹரன்.
கோவை புறநகர் தெற்கு மாவட்டம் - கார்த்திக் பொன்னுச்சாமி, பிரேம்குமார், சங்கர் கணேஷ், ஷாஜகான், கோகுல், ராஜசேகர்.
நீலகிரி மாவட்டம் - கணேஷ், மணிகண்டன், சந்திரசேகர்.
திருப்பூர் மாநகர் மாவட்டம் - வினோத்குமார், சசிக்குமார், பிரபாகரன்.
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் - ரியாஸ்கான், சக்திவேல், கோவை மனோஜ்.
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் - சதீஷ் போஜன், சிவக்குமார் (எ) ரஜினி, மிதுன்.
திருச்சி மண்டலம்
திருச்சி மாநகர் மாவட்டம் - அறிவு அரவிந்தன், திருமால்மருகன், சிவலிங்கம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் - சிவா, விஸ்வேஸ்வரன், திருநாவுக்கரசு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் - சதீஷ்குமார், ரஞ்சித்குமார், பிரியா.
பெரம்பலூர் மாவட்டம் - கவியரசு, திருப்புகழ் செல்லதுரை, நாகராஜன்.
அரியலூர் மாவட்டம் - கிர்ஷாந்த் சுப்ரமணியம், ராதா வேங்கடநாதன்,வெங்கட்பிரபு.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் - கோபாலகிருஷ்ணன், திருமுருகன், ராகுல்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் - சுரேஷ்குமார், புள்ளம்பாடி பழனிச்சாமி, காசிராமன்.
தஞ்சாவூர் மண்டலம்
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் - மாதானம் சத்தியமூர்த்தி, பிரேம்குமார், ராஜா.
தஞ்சாவூர் மேற்கு மாவட்டம் - சுரேன், ஸ்ரீதரன், திருச்செந்தில்.
தஞ்சாவூர் மத்திய மாவட்டம் - தியாகராஜன், சரவணன், லெட்சுமிகாந்தன்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் - திவாகர், அலை அருண், நடராஜன்.
நாகப்பட்டினம் மாவட்டம் - தம்பிமா (எ) முகமது இப்ராஹிம், மணிகண்டன், துளசி அய்யா.
மயிலாடுதுறை மாவட்டம் - சிங்.ரமேஷ்குமார், பாலாஜி, பிரபு.
திருவாரூர் மாவட்டம் - நடராஜன், விக்னேஸ்வரன், முருகு.சசிகுமார்.
மதுரை மண்டலம்
மதுரை மாநகர் மாவட்டம் - வீரமார்பன், கோகுல் கௌதம், சேட்டை கார்த்திக்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் - பாலசந்திரன், துரைப்பாண்டி, ஜெயமுனி.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் - அப்துல் சமது, சதீஷ்குமார், முத்துக்குமார்.
தேனி கிழக்கு மாவட்டம் - வெற்றிவேல்ராஜா, தியாகு, பிரசன்னகுமார்.
தேனி மேற்கு மாவட்டம் - சிங்கராஜபாண்டியன், ஆனந்த், ராம்குமார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் - திருமூர்த்தி, ரமேஷ்பாபு, கௌதம்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் - மாணிக்கம், கவிசெல்வம் தங்கம், செல்வகுமார்.
விருதுநகர் மண்டலம்
விருதுநகர் கிழக்கு மாவட்டம் - திலீப் கண்ணன், அரவிந்த், நாகராஜன் ராஜா.
விருதுநகர் மேற்கு மாவட்டம் - கோபி, சங்கர் ராமநாதன், குழந்தை.
சிவகங்கை மாவட்டம் - பிரதாப், ராமர், பால பாலாஜி.
ராமநாதபுரம் மாவட்டம் - வெண்ணிலா சசிகுமார், பாண்டியராஜன், யூனுஸ் முகமது.
திருநெல்வேலி மண்டலம்
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் - மலேஷ், குமரகுரு, மகேஷ்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் - சதீஷ், மனோ, ஷாஜி கண்ணன்.
தென்காசி வடக்கு மாவட்டம் - மந்திரமூர்த்தி, அருண் (எ) ஜெபக்குமார், மணிகண்டன்.
தென்காசி தெற்கு மாவட்டம் - ராமகிருஷ்ண கார்த்திக், ஸ்ரீதர், மோகன்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் - கருப்பசாமி, அருண்குமார், பிரதீப்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் - விஜயவேல், மதன், அசோக்ராஜ்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் - அழகு காசி ஈஸ்வரன், தர்மசீலன், பிரவின்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் - அன்பு அங்கப்பன், செய்யது சுல்தான் சம்சுதீன், கமலேஷ் பாண்டியன்.
மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும், அவரவர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று, தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
'எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்’ என்று சூளுரைத்த, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை மெய்ப்பிக்கின்ற வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், பூத் (பாகம்) கிளைக் கழக நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும், முழு ஒத்துழைப்பு நல்கி, களப்பணி ஆற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.