தமிழ்நாட்டில் 'அல்மாண்ட் கிட்' மருந்தை விற்பனை செய்ய தடை
அல்மான்ட் கிட் சிரப்பில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எதிலீன் கிளைகால் என்ற நச்சுப்பொருள் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது;;
பாட்னா,
பீகாா் மாநிலம், ஹாஜிபூா் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது தெரியவந்தது. கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை, அல்மான்ட் கிட் சிரப்பை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியது.
இதையடுத்து, தெலங்கானாவில் இம்மருந்து விற்பனை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து புதுச்சேரியிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அல்மான்ட் கிட் சிரப்பில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எதிலீன் கிளைகால் என்ற நச்சுப்பொருள் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது;
எதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருள் சிறுநீரகம், மூளை, நுரையீரல் பாதிப்படையும்; இந்த மருந்தின் விநியோகத்தை தடுக்க, மருந்தகங்கள், மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு; இது தொடர்பான புகார்களை 94458 65400 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்” என்று அரசு தெரிவித்துள்ளது.